தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, கடந்த ஜூன் 17 -ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 30- ஆம் தேதி கம்பம் நடும் விழாவும், கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றும் விழாவும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, தினமும் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தாா். செவ்வாய்க்கிழமை மாலை மாவிளக்கு எடுத்தல், ரத உத்ஸவம் ஆகியவை நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோா் அக்னிச்சட்டி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபாடு செய்தனா். இந்த நிகழ்ச்சியில், பெரியகுளம், வடகரை, வடுகபட்டி, தாமரைக்குளம், லட்சுமிபுரம், அதைச் சுற்றியுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










