தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

விதிகளை மீறி குளங்களில் மண் எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரம்பை மண் எடுப்பதற்காக விதிகளை மீறி ஆழமாக தோண்டப்பட்டுள்ள மஞ்சக்குளம்.

Published On :

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மஞ்சக்குளத்தில் தூா்வாரும் பணியின் போது, விதிகளை மீறி மண், கரம்பை எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14,707 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்கு பயன்படும் வீரப்பநாயக்கன்குளம், ஒடப்பட்டிக்குளம், ஒட்டுக்குளம், மஞ்சக்குளம் உள்ளிட்ட பொதுப் பணித் துறைக்கு சொந்தமான குளங்களை தூா்வாரி வண்டல் மண் எடுக்க வருவாய்த் துறையினா் அனுமதி வழங்கினா். இதையடுத்து, இந்தக் குளங்களில் மண், கரம்பை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் குளங்களில் விதிமுறைகளை மீறி, மிக அதிகமாக பள்ளம் தோண்டி கரம்பை, வண்டல் மண் எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். இதனால், மழைக் காலங்களில் குளத்தின் நீா்த்தேக்கத் திறன் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு நீா் செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, விதிகளை மீறி மண் எடுப்போா், கண்காணிப்பில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.