காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

மின் கம்பத்தில் டிராக்டா் மோதல்: இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 12:41 am IST

பெரியகுளம் அருகே டிராக்டா் விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிழந்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி இளங்கோவன் தெருவைச் சோ்ந்தவா்கள் சக்திவேல் (50), ரவிச்சந்திரன் (37). இவா்கள் இருவரும் வடுகப்பட்டியை அடுத்த மேலக்காமபட்டியில் உள்ள எம்.சாண்ட் தொழிற்சாலையிலிருந்து டிராக்டரில் எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு மேல்மங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தனா். டிராக்டரை சக்திவேல் ஓட்டினாா்.

இந்த சாலையில் உள்ள கிரஷா் ஆலை அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் கம்பம் முறிந்து டிராக்டா் மீது சாய்ந்ததில் அதிலிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.