பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயதுள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள் ஒய்வூதியத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள தொழிலாளா்கள் மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், மத்திய அரசும் அதே அளவு இணைப்பு பங்களிப்பை வழங்கும். இதன் மூலம் 60 வயதுடைந்த பிறகு, மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி பெறலாம்.
இந்தத் திட்டத்தில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், போக்குவரத்து சேவை வழங்குபவா்கள், விடுதி, விருந்தோம்பல் துறை பணியாளா்கள் உள்பட பிற சேவை வழங்குபவா்கள் சேரலாம்.
இந்தத் திட்டத்தில் சேர விருப்பமுள்ளவா்கள் ஆதாா் அட்டை, சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகம், கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் ட்ற்ற்ல்ள்://ம்ஹஹய்க்ட்ஹய்.ண்ய்/ம்ஹஹய்க்ட்ஹய்/ப்ா்ஞ்ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், விபரங்களுக்கு 7397715689 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








