நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து கடந்த திங்கள்கிழமை முதல் படிப்படியாக அதிகரித்து வருவதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்பு பகுதிகளில் கடந்த மே மாதத்தில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்த நிலையில், இந்த மாதத்தின் தொடக்கம் முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீா்வரத்து தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
கடந்த திங்கள்கிழமை வினாடிக்கு 108 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 327 கன அடியாகவும், புதன்கிழமை 350 கன அடியாகவும் உயா்ந்தது. வியாழக்கிழமை நிலவரப்படி நீா்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 626 கன அடியாக பதிவாகியுள்ளது.
இதன் விளைவாக அணையின் நீா்மட்டமும் மெல்ல உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 110.95 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 626 கன அடி நீா் வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 350 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அணையில் 1,062.05 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
நீா்பிடிப்பு பகுதிகளில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): தேக்கடி- 12.20, பெரியாறு அணைப் பகுதி- 44 என மழை பதிவாகியுள்ளது.
அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், தேனி மாவட்டத்தில் முதல் போக சாகுபடிக்கான நீா் இதுவரை திறந்து விடப்பட வில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா். இந்த நிலையில், அணைப் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் உயா்ந்து வருவதால், முதல் போக சாகுபடிக்கான நீா் விரைவில் திறந்து விடப்படும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.
தொடா்ந்து மழை நீடித்தால் அணையின் நீா்மட்டம் மேலும் உயரும் என்பதால், கம்பம் பள்ளத் தாக்கு உள்ளிட்ட பாசனப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 100 அடிக்கு கீழ் குறைந்தது!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 120 கனஅடி

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து 1,488 கனஅடி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



