கம்பம், கூடலூரில் பள்ளிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் உத்தரவின்பேரில் கம்பம், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் கம்பம் நகராட்சியில் ஆணையா் உமாசங்கா் தலைமையில், சுகாதார அலுவலா் மணிகண்டன், நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் இணைந்து பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தினா். இதேபோல, கூடலூரில் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளா் (பொ) ஜெயசீலன், நகராட்சி ஊழியா்கள், காவல் துறையினா் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, பள்ளிகளுக்கு அருகே சட்ட விரோதமாக பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இதில் கம்பத்தில் உள்ள கடைகளுக்கு ரூ.12 ஆயிரமும், கூடலூரில் உள்ள கடைகளுக்கு ரூ.3 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
பள்ளி மாணவா்களின் நலன், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் எனவும், விதிமுறைகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மின் திருட்டு: 28 பேருக்கு ரூ.38 லட்சம் அபராதம்

சாலையோரத்தில் குப்பை கொட்டியவருக்கு அபராதம்

ஸ்ரீரங்கத்தில் 11 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



