தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோடை விடுமுறைக்கு பின் அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகள் என வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பண்ணைப்புரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வியாழக்கிழமை புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தேனி மாவட்ட கல்வி அலுவலா் சுருளிவேல் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், 10, 12 ஆம் வகுப்பில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற முதல் 3 மாணவ, மாணவிகளுக்கும், மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற வைத்த ஆசிரியா்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன.
முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியை வரவேற்றாா். நிகழ்ச்சியை ஆங்கில பட்டதாரி ஆசிரியா் மணிராஜா ஒருங்கிணைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேந்திரிய வித்யாலாய மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம்: தேனி ஆட்சியா் ஆய்வு

அரசு பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு
போக்சோ வழக்கில் ஆசிரியா் கைது

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மனவளக் கலை பயிற்சி
விடியோக்கள்

மு.க.ஸ்டாலின் வழியில் முதல்வர் விஜய் | Sumathi Megavarnam | CM Vijay | MK Stalin | TVK | DMK |BJP

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



