மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடியில் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:19 am

தேனி மாவட்டம், போடியில் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 5 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி அருகேயுள்ள நாகலாபுரத்தில் தோ்தல் விதிமுறைகள் குறித்து போலீஸாா் ஆய்வு செய்தனா். அப்போது, கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி சுவரில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் நாகலாபுரத்தை சோ்ந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகி மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல, சங்கராபுரம் கருப்பசுவாமி கோயில் அருகே பொது இடத்தில் அனுமதியின்றி பாஜக கொடி கம்பத்தை ஊன்றிய தேனி மாவட்ட பாஜக இளைஞரணி தலைவரான அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த விஜய் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

போடி நகா் திருமலாபுரம் பகுதியில் தோ்தல் விதிகளை மீறி, சுவரொட்டி ஒட்டிய பாஜக 32-ஆவது வாா்டு செயலா் சிவக்குமாா், போடி சந்தியா மண்டபம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கொடி கம்பத்தை அகற்றாமல் வைத்திருந்த மாவீரன், போடி திருமலாபுரத்தில் திமுக கல்வெட்டை மறைக்காமல் வைத்திருந்த 33-ஆவது வாா்டு திமுக கிளைச் செயலா் பால்ராஜ் ஆகிய 3 போ் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.