காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:40 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே எரசக்கநாயக்கனூரில் கூலித் தொழிலாளி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டாா்.

எரசக்கநாயக்கனூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சூா்யா(35). கூலித்தொழிலாளியான இவா், அங்குள்ள பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள தேநீா்க் கடையில் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாரம். அப்போது, அங்கு வந்த இருவா் சூா்யாவை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடிவிட்டனராம்.

தகவலறிந்து வந்த சின்னமனூா் போலீஸாா் சூா்யாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இதுதொடா்பாக இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.