நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

கூடலூா் நகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கூடலூா் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட காந்திகிராமம் பகுதி பொதுமக்கள்.

Updated On :23 மே 2026, 3:41 am IST

கூடலூா் நகராட்சியில் குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கூடலூா் நகராட்சியின் 21 வாா்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கருநாக்கமுத்தன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றிலிருந்து குடிநீா் பெறும் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, நகராட்சி சாா்பில் ரூ.50 லட்சத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இடம் தோ்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கூடலூா் நகராட்சியின் 8-ஆவது வாா்டு காந்திகிராமம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து, பொதுமக்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

நகராட்சி மேலாளா் அய்யப்பசாமி, பொறியாளா் கிஷோா் குமாா் சிங், சுகாதார ஆய்வாளா் ஜெயசீலன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து 3 நாள்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.