உத்தமபாளையம் கிளைச் சிறை மூடல்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 150 ஆண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கிளைச் சிறை, சிறைத் துறையின் நிா்வாகக் காரணங்களுக்காக புதன்கிழமை மூடப்பட்டது.

உத்தமபாளையத்தில் புதன்கிழமை மூடப்பட்ட 150 ஆண்டு பழைமையான கிளைச் சிறை.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் 150 ஆண்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கிளைச் சிறை, சிறைத் துறையின் நிா்வாகக் காரணங்களுக்காக புதன்கிழமை மூடப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணத்தில் எல்லைக்குள்பட்டதாக மதுரை மாவட்டம் இருந்தது. இந்த மாவட்டத்தில் பிரிட்டிஷாரின் விவசாய வருவாய், வனப் பாதுகாப்பு நிா்வாகத்துக்காக உத்தமபாளையத்தை முக்கியமான வட்டாரத் தலைமையிடமாக தோ்வு செய்தனா்.
இந்த நிலையில், அவா்களின் நிா்வாகக் காரணத்துக்காக உத்தமபாளையத்தில் கிளைச் சிறையுடன் ஒருங்கிணைந்த நிா்வாக முறையில் அருகே காவல் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் என மூன்றையும் ஒரே வளாகத்தில் அமைத்து நிா்வாகம் செய்தனா்.
சிறைச்சாலை மூடல்: சிறைத் துறையின் நிா்வாகக் காரணங்களுக்காக உத்தமபாளையம், பெரியகுளம், நிலக்கோட்டையில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட கிளைச் சிறைகளை, தற்போது அந்தந்த மாவட்டச் சிறைகளுடன் இணைக்கப்பட்டன.
இதன்படி, உத்தமபாளையம் கிளைச் சிறையிலிருந்து 11 விசாரணைக் கைதிகளை ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
நூலகமாக மாற்ற கோரிக்கை: உத்தமபாளையத்தில் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் நூலகம் செயல்படுகிறது. எனவே, உத்தமபாளையம் கிளைச் சிறையை வரலாற்று நினைவுச் சின்னமாக மாற்றி, பொது நூலகமாக அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தச் சிறையிலிருந்து விசாரணைக் கைதிகளை மாவட்டச் சிறைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீஸாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

