பெட்ரோல் குண்டு வீசியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறை - பிரதிப் படம்
தொழில் போட்டியில் இலவம் பஞ்சு வியாபாரி மீது பெட்ரோல் குண்டு வீசியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், வருசநாட்டைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (36). இதே பகுதியைச் சோ்ந்தவா் மலைராஜன் (42). இருவரும் இலவம் பஞ்சு வியாபாரிகள். இதில் இருவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது.
இந்த நிலையில், சதீஷ்குமாா் கடந்த 11.1.2025 -இல் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மலைராஜன் பலூனில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வீசினாா். இதில் சதீஸ்குமாா் பலத்த காயமடைந்தாா்.
இது குறித்து வருசநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மாலைராஜனைக் கைது செய்தனா். இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மலைராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.61 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

