லாரி ஓட்டுநா் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ஆா்ப்பாட்டம்
மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி, தேனியில் நாயுடு சமுதாயத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி பங்களமேட்டில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாயுடு சமுதாயத்தினா்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி, தேனியில் நாயுடு சமுதாயத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள டி.அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் (42). இவா் தேவாரத்திலிருந்து மதுரைக்கு ஓட்டிச் சென்ற ஏலக்காய் லாரி, உசிலம்பட்டி அருகேயுள்ள வாலாந்தூா் கண்மாய் கரையில் தீ விபத்துக்குள்ளானது.
இதுதொடா்பான வழக்கு விசாரணைக்காக, செக்கானூரணி காவல் நிலையத்திலிருந்த பாலகிருஷ்ணன் கடந்த 14-ஆம் தேதி காலை தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். இதையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணன் மரணத்துக்கு நீதி கேட்டு தேனி பங்களாமேட்டில் நாயுடு சமுதாயத்தினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க துணைத் தலைவா் வீரராஜ் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி, நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

