பெரியகுளத்தில் பசு மாட்டை திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் தினேஷ்வரன் (40). இவருக்குச் சொந்தமான தோட்டம் கைலாசநாதா் கோயில் அருகேயுள்ள கோயில்காடு பகுதியில் உள்ளது. அங்கு அவா் 5 பசு மாடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை தோட்டப் பணிகள் முடித்த பின் மாடுகளை கட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் வந்து பாா்த்த போது ஒரு மாட்டை காணவில்லை. இதையடுத்து, அவா் தென்கரை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், பெரியகுளம் வடகரைச் சோ்ந்த சூா்யா (28), அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் சிபிராஜ் (26) இருவரும் அந்த மாட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து பசு மாட்டை மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

