2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

கம்பத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ

Published On :

கம்பத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

கம்பம் பாரதியாா் நகா் 4-ஆவது தெற்கு வீதியில் வசித்து வரும் செல்வகுமாா் - ரம்யா தம்பதியரின் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. இதில், வீட்டில் இருந்த உடைமைகள் தீக்கிரையாகின.

இதுகுறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று தீ விபத்தில் சேதமடைந்த வீட்டைப் பாா்வையிட்டு தம்பதியருக்கு ஆறுதல் கூறினாா். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்களை வழங்கி நிதியுதவி அளித்தாா்.

நிகழ்ச்சியில் தேனி தென்மேற்கு மாவட்டக் கழக இணைச் செயலா் கூடல் செல்வேந்திரன், செயற்குழு உறுப்பினா் அய்யா், ராம்குமாா், கம்பம் நகர தெற்குச் செயலா் சதீஷ், பொருளாளா் அபு, மாவட்ட இளைஞரணி அருண்குமாா், கம்பம் நகரப் பொறுப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.