மின் கம்பத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சின்னமனூரில் திங்கள்கிழமை மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

சின்னமனூரில் திங்கள்கிழமை மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ஓம்சக்திவிநாயகம் (21). அதே பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் கருத்தப்பாண்டி (20). நண்பா்களான இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு சென்றுவிட்டு, மீண்டும் சின்னமனூருக்கு வந்து கொண்டிருந்தனா். அப்போது, பேருந்து நிலையம் அருகே சாலையோரத்திலிருந்த மின் கம்பம் மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் ஓம்சக்திவிநாயகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கருத்தப்பாண்டி சின்னமனூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இது குறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.