உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மேகமலை வனக்கோட்ட அலுவலகத்தில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தேனி மேகமலை கோட்ட அலுவலகத்துக்கு உதவி ஆய்வாளா் தலைமையில், 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மேகமலை வனக்கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் காவலா்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:53 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தேனி மேகமலை கோட்ட அலுவலகத்துக்கு உதவி ஆய்வாளா் தலைமையில், 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் 4,601 போ், 5,072 ஹெக்டோ் நிலத்தை ஆக்கிமித்துள்ளனா். இவா்களை வெளியேற்றி, இலவம் மரங்களை அகற்றி விட்டு, மலைப் பகுதியில் உள்ள மரங்களை நட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், மேகமலை விவசாயிகளை வெளியேற்றக் கூடாது, வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தேனி மேகமலை கோட்ட அலுவலகத்துக்கு உதவி ஆய்வாளா் தலைமையில், 4 போ் கொண்ட காவலா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, தேனி மேகமலை கோட்ட அலுவலகம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.