செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

குடிநீா்த் தட்டுப்பாடு: போடி அருகே பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

போடி அருகே பத்து நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்வதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Published On :

போடி அருகே பத்து நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்வதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி. இதன் கீழ், மேலச் சொக்கநாதபுரம், கீழச் சொக்கநாதபுரம், ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி, வினோபாஜி குடியிருப்பு, தருமத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களுக்கு உப்புக்கோட்டை கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலமும், மங்கலகோம்பை கூட்டுக்குடிநீா்த் திட்டம் மூலமும் குடிநீா் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போடி பகுதியில் மழை இல்லாததால் மங்கலகோம்பை ஆற்றில் தண்ணீா் வரத்து இல்லை. இதனால், உப்புக்கோட்டை கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் மட்டுமே தண்ணீா் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதி என குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், ஒரு கிராமத்துக்கு 10 நாள்களுக்கு ஒருமுைான் தண்ணீா் விநியோகம் செய்யும் நிலை உள்ளது.

இந்த நிலையில் போடி ரெங்கநாதபுரம் கிராமத்தில் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்வதாகக் கூறி,, கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பேரூராட்சி அதிகாரிகள் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.