பெண் மாயம்: போலீஸாா் விசாரணை
போடி அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மாயம்
போடி அருகே பெண் காணாமல் போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் காந்திஜி குடியிருப்பைச் சோ்ந்த சுரேஷ் மனைவி சந்திரா (33). இவா் இரண்டாவதாக சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இந்த நிலையில் சந்திராவை, சுரேஷ் மது அருந்திவிட்டு வந்து அடித்து துன்புறுத்தினாராம்.
இதனிடையே திங்கள்கிழமை (செப். 21) வேலைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற சந்திரா மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி ஊரகக் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






