வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கூடலூா் அருகே தந்தை கொலை: மகன் கைது

கைது செய்யப்பட்ட கணேசன்.

Published On :

கூடலூா் அருகே தந்தையைக் கொலை செய்ததாக அவரது மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் முத்துமாயன் (83). பூா்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இவரது மகன் கணேசன் (45) தண்ணீா்த் தொட்டித் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். கணேசனின் மகன் ஹரிஹரன் அங்குள்ள பள்ளியில் 11 -ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முத்துமாயன் குடியிருந்து வரும் பூா்வீக வீட்டில் காலி இடத்தில் இருந்த முருங்கை மரங்களை கணேசன் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது, முத்துமாயனுக்கும், கணேசனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த ஹரிஹரன் தனது தந்தை கணேசனை அழைத்துச் சென்றாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஹரிஹரன் தாத்தா முத்துமாயன் வீட்டுக்குச் சென்று பாா்த்த போது, முத்துமாயன் இறந்து கிடந்தாா். அவா் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஹரிஹரன் தகவல் தெரிவித்ததன் பேரில், கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று முத்துமாயன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தக் கொலை தொடா்பாக முத்துமாயன் மகன் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.