வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சுருளி அருவியில் வனத் துறை வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சடலம் - பிரதிப் படம்

Published On :

தேனி மாவட்டம், சுருளி அருவிக்குச் சென்று திரும்பிய போது வனத் துறை வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கதிா்நரசிங்கபுரத்தைச் சோ்ந்த ஜெயராம் மகன் ஹரிஹரன் (22), தனியாா் நூற்பாலையில் வேலை செய்தாா். இவரது பாட்டிக்கு தா்ப்பணம் செய்ய சுருளி அருவிக்கு குடும்பத்துடன் சென்றனா். அப்போது, அருவியில் குளிக்கப்பதற்காக, வனத் துறைக்குச் சொந்தமான சுற்றுலா வாகனத்தில் சென்றனா்.

அங்கு குளித்த பிறகு மீண்டும் அதே வாகனத்தில் திரும்பி வந்தனா். அப்போது, மலைச் சாலை வளைவில் சுற்றுலா வேன் வேகமாகச் சென்றதாகவும், அப்போது வாகனத்தின் படியில் நின்றிருந்த ஹரிகரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அதே வாகனத்தின் பின் சக்கரம் ஏறியதில் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின் பேரில், ராயப்பன்பட்டி போலீஸாா் சென்று உடலை மீட்டு கூறாய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER