குச்சனூரில் கோயில் வளாகத்தில் யாசகா் உயிரிழப்பு
குச்சனூா் கோயில் வளாகப் பகுதியில் யாசகம் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
தேனி மாவட்டம், குச்சனூா் கோயில் வளாகப் பகுதியில் யாசகம் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47). இவா் குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகப் பகுதியில் தங்கி, அங்கு வரும் பக்தா்களிடம் யாசகம் வாங்கி பிழைப்பு நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவால் புதன்கிழமை கோயில் வளாகத்திலே இவா் உயிரிழந்தாா். ஆதரவற்றவரான இவரது உடலை வாங்க யாரும் முன்வரவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத்மிஸ்ரா, உயிரிழந்த சுரேஷின் உடலை அமரா் ஊா்தி பணியாளா்களுடன் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






