ஸ்ரீவிலி. ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் வறட்சி நிவாரணப் பணிகள் செய்ய தீர்மானம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியையொட்டி, கிராமங்களில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்கான


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நிலவும் கடுமையான வறட்சியையொட்டி, கிராமங்களில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்கான ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் கே.காளிமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் கே.காளிமுத்து பேசுகையில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மழையின்றி மிகவும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக ஒன்றியத்தில் 137 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டது. மேலும் பொது நிதியில் இருந்து 40 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டது.
தற்போது வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசிற்கு கருத்துரு மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பப்படவுள்ளது. ஒன்றியத்தில் உள்ள 15 வார்களில் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், தேவையுள்ள இடத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என மன்றம் ஒரு மனதாக முடிவு செய்துள்ளது என்றார். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...