ஸ்ரீவிலி.யில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கட்சியின் நகர் செயலாளர் வி.டி.முத்துராஜ் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகரின் 33 வார்டுகளிலும் கட்சிக் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஆதரவற்றவர்கள், தேவையில் உள்ளவர்களுக்கு நகரச் செயலாளர் முத்துராஜ் தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் எம்.முருகன், நகர்மன்ற துணைத் தலைவர் சரோஜா நடராஜன், கட்சியின் நகர் துணைச் செயலாளர் வன்னியராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் கந்தசாமி, காமராஜர், ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...