அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்: ஒன்றியக் குழுத் தலைவர் தொடங்கி வைத்தார்

2013-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியுடன் முடிவடைந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் யாரும் போலியாவால் பாதிக்கப்படவில்லை என்ற ஒரு மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அறிவித்துள்ளது. 2009-ம்

News image
Updated On :20 ஜனவரி 2013, 10:43 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், இனாம்நாச்சியார்கோயில் ஊராட்சி, தைலாகுளத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: 2013-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதியுடன் முடிவடைந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் யாரும் போலியாவால் பாதிக்கப்படவில்லை என்ற ஒரு மைல்கல்லை நாம் எட்டியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக 2012-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி அறிவித்துள்ளது. 2009-ம் ஆண்டு உலக நாடுகளில், இந்தியாவில் போலியோ பாதி அளவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது நாட்டு மக்களிடையே போலியோ குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தொடர்ந்து அரசு ஆண்டிற்கு இரு முறை இலவசமாக கொடுக்கும் இந்த போலியோ சொட்டு மருந்தை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 151 மையங்களில் 6280 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.