தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளால் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதியிலும் அமோக வெற்றி பெறும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து வெள்ளிக்கிழமை கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், விழுப்பனூர் ஊராட்சி, பாட்டக்குளம் கிராமத்தில் பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழா வட்டாட்சியர் ஐ.திரௌபதி தலைமையில் நடைபெற்றது.இதில் 721 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டரை வழங்கி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து பேசுகையில் கூறியதாவது:
தமிழக முதல்வராக ஜெயலலிதா மூன்றாவது முறையாக பொறுப்பேற்று, அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு அனைவரும் எல்லா வளமும் பெற்று வாழ முழு முயற்சி எடுத்து வருகிறார். தமிழகத்திற்கு காவேரி நீர் தர கர்நாடகம் மறுக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளா மாநிலம் பிடிவாதமாக உள்ளது. இதனை மத்திய அரசு தட்டிக் கேட்கவில்லை. அனைவருக்கும் முதல்வர் எல்லாம் கொடுக்கிறார். மின்சாரம் ஏன் தர இயலவில்லை என்று கேட்கலாம். முதல்வர் ஒளிவு மறைவு இன்றி பகிரங்கமாய் பேட்டி கொடுத்தார். 2001-06 ஆண்டுகளில் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, மின் மிகை மாநிலமாக தமிழகம் விளங்கியது. 2006-ல் தி.மு.க. ஆட்சி வந்ததும் புதிய மின் திட்டங்கள் தொடங்கப்படவில்லை. மேலும் பழுதான மின் உற்பத்தி நிலையங்கள் பராமரிக்கப்படவில்லை. இந்த விளக்கத்தை முதல்வர் சொன்னவுடன் தமிழக மக்கள், முதல்வரின் விளக்கத்தில் நியாயம், நேர்மை, உண்மை இரு்ககிறது என்று தெளிவாக புரிந்துகொண்டார்கள்.
தமிழக மக்களாகிய நீங்கள், முதல்வர் மீது நம்பிக்கை வைத்து அவரது ஆட்சி அமைய உதவி செய்தீர்கள். உங்களுக்காக அவர் தன்னையே அர்ப்பணித்து உழைத்து வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு குடும்பமே தமிழக மக்கள்தான். அதனால் தான் முதல்வர் வெளிப்படையாக பொது மக்களிடம் இவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டீர்கள். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மீண்டும் மாறும்.தமிழகத்தின் உரிமைகளை பெற, தமிழர்கள் நலன் காக்கப்பட அயராது உழைத்து வரும் முதல்வர் ஜெயலலிதா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வரும் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும். அ.தி.மு.க.வை பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதியிலும் அமோக வெற்றி பெறும் என ஒன்றியக் குழுத் தலைவர் காளிமுத்து கூறினார்.விழாவில் ஒன்றியக் குழு உறுப்பினர் அன்னபழனி மற்றும் ஊர் பெரியவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை பாடுபட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

அரையிறுதிப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா? ரவி சாஸ்திரி கூறுவதென்ன?

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு

நான்குநேரி கொலை: மாணவர் சின்னதுரை மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்பு?
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

