பேரூராட்சி இளநிலை உதவியாளருக்கு சிறந்த சேவைக்கான ஆட்சியர் விருது
பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஆ.காமராஜூக்கு சிறந்த சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் வழங்கி


பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஆ.காமராஜூக்கு சிறந்த சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் வழங்கி கௌரவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் ஆ.காமராஜ். இவர் மாவட்ட அரசு ஊழியர் (பேரூராட்சிகள் துறை) சங்க மாவட்டத் தலைவராகவும் உள்ளார். முதலிபட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில், பேரூராட்சியின் பணியாளர்கள் சுமார் 60 பேருடன், காமராஜ் நேரிடையாக சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்துள்ளார்.
அப்போது உடனடியாக மருத்துவமனைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடத்தில் சுகாதரப் பணிகளை மேற்கொண்டு, தொற்று நோய் பரவாமல் முனைப்புடன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த துப்புறவுப் பணியில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும் இந்த விருது மற்றும் சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், விருதுநகரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காமராஜூக்கு வழங்கி கௌரவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...