இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளர் காலமானார்

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல தொழிலதிபரும், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளருமான எம்.ரத்தினசாமி நாடார் (84) உடல் நலக் குறைவு காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திங்கள்கிழமை காலமானார்.

News image
Updated On :29 டிசம்பர் 2014, 6:49 am

கோ.ஜெயக்குமார்

கோ.ஜெயக்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.ஸ்ரீவில்லிபுத்தூர் பிரபல தொழிலதிபரும், லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தாளாளருமான எம்.ரத்தினசாமி நாடார் (84) உடல் நலக் குறைவு காரணமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திங்கள்கிழமை காலமானார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதல் முதலாக ஜூப்பிட்டர் மேட்ச் ஒர்க்ஸ் என்ற தீப்பெட்டி தொழிற்சாலையை ஆரம்பித்து ஏராளமானோருக்கு வேலை வழங்கியவர் இவர். ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த இவர், 9 ஆண்டுகள் இப் பள்ளியின் தாளாளாராக சிறப்பாக சேவை செய்தார். 1977-ம் ஆண்டு முதல் அரிமா சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்.

பல்வேறு சமூக சேவைகளை தனது சொந்தப் பணத்தில் செய்து பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்றவர். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உண்டு. திருமங்கலத்தில் உள்ள மகளது வீட்டில் இருந்த ரத்தினசாமி நாடார், உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது உடல் திருங்கலத்தில் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.