சாத்தூர் அருகே புதன்கிழமை பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூங்காரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ஹிந்துஜா (24). இவர் புதன்கிழமை அதிகாலை வீட்டின் அருகே தனியாக நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாரம். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.