விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர்

ராஜபாளையம் வழியாக சபரி மலைக்கு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும்

Updated On :25 டிசம்பர் 2018, 6:38 am IST

ராஜபாளையம் வழியாக சபரி மலைக்கு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் கார், வேன், பேருந்து மூலம் திருமங்கலம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் வழியே தென்காசி, ஆரியங்காவு, புனலூர், கோட்டயம், பம்பை வழியாக சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிலர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரவு நேரங்களில் செல்வது வழக்கமாகி விட்டது. நள்ளிரவில் தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நள்ளிரவில் சபரிமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இலவச தேநீர் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். இதில் டி.எஸ்.பிக்கள் ராஜா, ரவிச்சந்திரன், வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேநீர் வழங்கும் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இவ்வழியாக சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.