விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் எய்ட்ஸ் மற்றும் காசநோய் பரிசோதனை முகாம் அக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருச்சுழியிலுள்ள ஐசிடிசி மையமும் இக் கல்லூரியும் இணைந்து நடத்திய முகாமிற்குக் கல்லூரி முதல்வர் எஸ்.பாண்டியராஜன் தலைமை வகித்தார். துணை முதல்வர் இசக்கித்துரை முன்னிலை வகித்தார். முகாமில் பேசிய முதல்வர் பாண்டியராஜன், ஆரோக்கியமே செல்வம் என்பது பற்றியும், நோய் வரும் முன் காப்போம் என்பது பற்றியும் மாணவர்களிடையே விளக்கினார். இதில், ஐசிடிசி மைய ஆலோசகர் விஜயலட்சுமி எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் தாமாக முன்வந்து எய்ட்ஸ் மற்றும் காசநோய் குறித்த மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் சி.செல்லப்பாண்டியன், செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் எஸ்.குமார் ஆகியோர் செய்திருந்தனர். நிர்வாகி எஸ்.குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள கல்வித்துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


