"நீட்' தேர்வுக்கு விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகரில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
Updated on
1 min read

விருதுநகரில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
விருதுநகர் கல்லூரி சாலையில்   சமூக நீதி பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக மாணவரணி ராஜகுரு, நகர செயலாளர் தனபாலன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ஆதவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  
பின்னர், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com