அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்த 4 பேர் கைது

சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்த 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Updated On :21 மே 2018, 6:56 pm

சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்த 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சாத்தூர் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் போலீஸார் கலைஞர் காலனி, கட்டணஞ் செவல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். அப்போது கலைஞர் காலனியைச் சேர்ந்த ராஜா (32) என்பவரது வீட்டில் வைத்திருந்த 3 பெட்டி பட்டாசுகள் , அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (50) என்பவர் வீட்டில் 3 பெட்டி சேல்சா வெடி, கட்டணஞ் செவல் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (40) என்பவர் வீட்டில் 6 பெட்டி மத்தாப்பு வெடி, சங்கரராஜ் (55) என்பவர் வீட்டில் 100 குரோஸ் வெள்ளைத்திரி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வெம்பக்கேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து ராஜா, ஆறுமுகம், சங்கரராஜ், பார்த்தசாரதி ஆகிய 4 பேரையும் கைது செய்த,னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.