மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட, சார்பு நீதிமன்றங்கள் திறப்பு

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல்

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆ.முத்துசாரதா புதன்கிழமை திறந்து வைத்தார்.
பின்னர் நீதிபதி பேசியதாவது: விரைவான நீதி மக்களைச் சென்றடைய இந்த இரு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மற்றும் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும். 
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களும், வழக்காடிகளும் இரண்டாம் தளத்திற்கு சிரமம் இல்லாமல் சென்று வர சாய்தளப் பாதை அமைக்கப்படவுள்ளது. மேலும் நீதிமன்றங்களில் விரைவில் ஒலிபெருக்கி வசதியும் செய்து தரப்படும். சிவகாசி மற்றும் ராஜபாளையத்தில் கட்டடப்பட்டு வரும் புதிய நீதிமன்றத்துக்கான கட்டுமானப் பணிகள் 2 மாதங்களுக்குள் நிறைவு பெற்று திறக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விரைவில் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ராஜராஜன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலாளர் நீதிபதி ஜெ.கிறிஸ்டல் பபிதா,  ஸ்ரீவில்லிபுத்தூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் டி.கதிரேசன், செயலாளர் திருமலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் டி.சம்பத்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.