சிவகாசி காவல் கோட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த 135 சாலை விபத்துக்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து புதன்கிழமை சிவகாசி காவல் துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2018 ஆம் ஆண்டு சிவகாசி காவல் கோட்டத்தில் நிகழ்ந்த 135 சாலை விபத்துக்களில் 28 பேர் உயிரிழந்தனர்.117 பேர் காயமடைந்தனர். சிவகாசி காவல் கோட்டத்தில் சிவகாசி நகர், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், மாரனேரி, எம்.புதுப்பட்டி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.
இதில் 2018 ஆம் ஆண்டு 11 கொலை வழக்குகளும், 11 கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட 51 வழக்குகளில் 40 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு ஆகியவை தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ. 35.81 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போயுள்ளன. இதில் ரூ. 25.80 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டு, திருடியவர்கள் கைது செய்யப்பட்டனர். வெடிபொருள் சட்டத்தின்கீழ் 14 வழக்குகளும், பாலியல் தொந்தரவு மற்றும் பலாத்காரம் தொடர்பாக 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!

வெளியானது பெத்தி டிரைலர்!

இன்றைய செய்திகள் - நேரலை!

திரைத் துறை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி! தயாரிப்பாளர் சங்கம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
