நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

தொழிலதிபர் வீட்டில்  4 பவுன் நகை, ரூ.3 லட்சம் வெள்ளி திருட்டு

விருதுநகர் அருகே ஐஸ்கிரீம் ஆலை உரிமையாளர் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

Updated On :23 ஜனவரி 2019, 7:41 am IST

விருதுநகர் அருகே ஐஸ்கிரீம் ஆலை உரிமையாளர் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
 விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(35). இவர் ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் அவரது வீடு உள்ளது. அண்மையில், மனோகரன் வீட்டைப்பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச்  சென்று இருந்தாராம். இந்த நிலையில், அவரது வீட்டு ஜன்னல் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக பணிப்பெண், மனோகர னுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. 
இது குறித்தப் புகாரின்பேரில் சூலக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.