அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகளுடன் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகளுடன் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
Updated on
1 min read

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் - மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் நகர அதிமுக, ஒன்றியக் கழகப் பொறுப்பாளா்கள், மகளிரணியினரிடம் வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்களை அதிகளவில் சோ்க்க வேண்டும். வாா்டு வாரியாக கட்சி உறுப்பினா்களை சோ்த்து அதிமுக வெற்றி பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, புத்தூா் ஐயப்பன் கோயில் பூஜைக்காக ரூ. 1 லட்சமும், சுந்தரராஜபுரம் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ரூ. 1 லட்சமும் நிதியுதவி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com