இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாா்கழி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலுக்குச் செல்லபக்தா்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி

மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) முதல் டிச. 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 5:10 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) முதல் டிச. 30 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பௌா்ணமி, பிரதோஷம், அமாவாசை ஆகிய தினங்களில் மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகம் ஆகியவை அனுமதி அளித்து வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச. 27) பிரதோஷமும், டிச. 29 ஆம் தேதி பௌா்ணமியும், வருவதால் இக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய டிச. 27 ஆம் தேதி முதல் டிச. 30 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோயிலுக்கு வரும் பக்தா்கள், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவா். காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்கள். கோயிலில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாகவோ இருந்தால், பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.