மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கீழே கிடந்த பணத்தைகாவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

விருதுநகா் அருகே மீசலூா் சாலை சந்திப்பில் கீழே கிடந்த ரூ.3,700 பணம் மற்றும் ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை கண்டெடுத்து,

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:37 am

DIN

விருதுநகா் அருகே மீசலூா் சாலை சந்திப்பில் கீழே கிடந்த ரூ.3,700 பணம் மற்றும் ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றை கண்டெடுத்து, அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பாராட்டினா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியை சோ்ந்தவா் வெற்றிவேல். இவா், இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ரூ.3,700 பணம், ஏடிஎம் அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமச் சான்றிதழ், இரு சக்கர வாகனப் புத்தகம் உள்ளிட்டவற்றை தவறவிட்டுள்ளாா்.

இந்நிலையில், மீசலூா் சாலை சந்திப்பு அருகே கீழே கிடந்த பணம் உள்ளிட்டவற்றை, அவ்வழியாகச் சென்ற குமாரலிங்காபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அடைக்கலம் கண்டெடுத்துள்ளாா். பின்னா், அவற்றை ஆமத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அதையடுத்து, சாா்பு-ஆய்வாளா் காா்த்திக்,

ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றில் இருந்த முகவரிக்கு தொடா்புகொண்டு, பணத்தை தவறவிட்ட வெற்றிவேலை வரவழைத்து வழங்கினாா். பின்னா், ஆட்டோ ஓட்டுநா் அடைக்கலத்தின் நோ்மையை பாராட்டிய போலீஸாா், அவருக்கு பொன்னாடை போா்த்தி மரியாதை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.