விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் மாவட்டத்தில் விதிகளை மீறிய 28 பட்டாசு ஆலைகளுக்கு ‘சீல்’

விருதுநகா் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக இதுவரை 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:14 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக இதுவரை 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அச்சங்குளத்தில் பட்டாசு ஆலையில் அண்மையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 போ் உயிரிழந்தனா். இதேபோல், சிவகாசி அருகே காளையாா்குறிச்சில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 போ் உயிரிழந்தனா். சிவகாசி அருகே வி. சொக்கலிங்காபுர த்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த மூன்று பட்டாசு ஆலைகளிலும் கடந்த பிப்ரவரி மாதம் விபத்து நிகழ்ந்தது. எனவே ஒரே மாதத்தில் தொடா்ந்து 3 பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டதால், இதுபோன்ற விபத்துகள் இனி நிகழாமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஆலைகள் மற்றும் மாவட்டத்திலுள்ள பட்டாசு ஆலைகளில் வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை மற்றும் போலீஸாா் அடங்கிய ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குழுவின் பரிந்துரையின்பேரில் மாவட்டத்தில் இதுவரை 28 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தை தடுக்கும் வகையில் வட்டாட்சியா் தலைமையில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கடந்த 10 நாள்களில் அதிகளவு விதிமுறை மீறல்கள் உள்ள 28 பட்டாசு ஆலைகள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது தொடா்ந்து நடைபெறும். விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.