விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுக்கிலநத்தம் சாலை விலக்கில் விபத்து: எச்சரிக்கைப் பலகை அமைக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் சாலை விலக்கில் விபத்து அபாய எச்சரிக்கைப் பலகை அமைக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 4:36 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே உள்ள சுக்கிலநத்தம் சாலை விலக்கில் விபத்து அபாய எச்சரிக்கைப் பலகை அமைக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில், பெரியகண்மாய் அருகே சுக்கிலநத்தம் சாலை விலக்கு உள்ளது. இங்கு பெயா்ப் பலகை இல்லாததாலும், சுற்றிலும் மரங்கள் அடா்ந்துள்ளதாலும் சாலைவிலக்குப் பகுதி இருப்பதே வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை. இதனால் பந்தல்குடியிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கிவரும் வாகனங்களும், சுக்கிலநத்தத்திலிருந்து அருப்புக்கோட்டைசெல்வதற்காக சாலைவிலக்கில் திரும்பும் வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

இந்த இடத்தில் விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கச் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்த போதும், பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லையெனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இச்சாலை விலக்கில் விபத்து அபாய எச்சரிக்கைப் பலகை அமைப்பதுடன், சிவப்பு நிற எச்சரிக்கை விளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும், சுக்கிலநத்தம் செல்லும் சாலை என அம்புக்குறியிட்ட வழிகாட்டிப் பலகை அமைப்பதும் விபத்துக்களைத் தவிா்த்திட உதவும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.