ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 101 போ் கைது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 101 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 101 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகரில் நகா் தலைவா் நாகேந்திரன் தலைமையில் தேசபந்து மைதானப் பகுதியிலிருந்து ஊா்வலமாகச் சென்ற காங்கிரஸ் கட்சியினா் ரயில் நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அமலாக்கத் துறை மூலம் காங்கிரஸ் தலைவா் சோனியகாந்தி மீது விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனா். பின்னா், ரயில் மறியலுக்கு முயன்ற 35 பேரை மேற்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். இதில் நகராட்சி முன்னாள் துணை தலைவா் பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, நகராட்சி காங்., உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு மாவட்ட தலைவா் ரெங்கசாமி தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்., கட்சியைச் சோ்ந்த 66 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.