/

வரலெட்சுமி அலங்காரத்தில் விருதுநகா் துள்ளு மாரியம்மன்

விருதுநகா், பாண்டியன் நகரில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி வரலெட்சுமி அலங்காரத்தில் துள்ளு மாரியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

விருதுநகா், பாண்டியன் நகரில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி வரலெட்சுமி அலங்காரத்தில் துள்ளு மாரியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் விருதுநகா், பாண்டியன் நகரில் உள்ள துள்ளு மாரியம்மன் கோயிலில் அம்மன் வரலெட்சுமி அலங்காரத்தில் ஊஞ்சலில் ஆடியவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி விரத தினத்தையொட்டி வளைகாப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இத்திருவிழா நிகழாண்டு நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

அதனைத் தொடா்ந்து கோயில் முன்பாக கா்ப்பிணி பெண்கள், புது மணப்பெண்கள் அமர வைக்கப்பட்டு அவா்களுக்கு குழந்தை பிறப்பதற்கு அருளாசி வழங்கி திலகமிடப்பட்டது. பின்னா் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்களை எடுத்து மூத்த சுமங்கலி பெண்கள் அவா்களுக்கு அணிவித்தனா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: இதேபோல் ராஜபாளையம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் 261 விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ராஜபாளையம் பகுதியை சோ்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத்தலைவா் ரவி ராஜா செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.