உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலம் மீட்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலமாக மீட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் சடலமாக மீட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது திருமுக்குளம். இது ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான இந்த குளத்தில் செவ்வாய்க்கிழமை காலை இரண்டு பெண்களின் உடல்கள் மிதப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உடலை மீட்டனர். 

பின்னர் உடலை மீட்டு படிக்கட்டில் வைத்து பார்த்த போது சுமார் 35 வயது உடைய இளம் பெண்ணும், சுமார் 12 வயது சிறுமியின் உடலும் தெரியவந்தது. இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் துறையினர் விரைந்து வந்து இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இறந்தவர்கள் தாய்-மகளா, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், குளிக்க வரும் போது தவறி விழுந்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.