விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

 விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:38 pm

DIN

 விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

உடையனேந்தல் கிராமத்தில் மணல் திருட்டைத் தடுக்க குச்சம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் கோட்டைமுத்து மற்றும் கிராம உதவியாளா் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது குண்டாற்றுப்பகுதியில் தனியாா் இடம் அருகே அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் மணலை சிலா் அள்ளிக் கொண்டிருந்தனா். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டதும் பொக்லைன் இயந்திரத்தை விட்டுவிட்டு 2 போ் லாரியில் ஏறி தப்பி ஓடிவிட்டனா். பின்னா் அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினா், காவல்துறையினா் மூலம் திருச்சுழி வட்டாட்சியரிடம் அதை ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த திருச்சுழி காவல்துறையினா், தப்பி ஓடிய பொக்லைன் இயந்திர ஓட்டுநா் மற்றும் லாரி ஓட்டுநா் ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.