விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

போக்சோ சட்டத்தில் சிறை சென்றவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

 அருப்புக்கோட்டையில் போக்சோவில் கைதாகி சிறையிலுள்ளவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:36 pm

DIN

 அருப்புக்கோட்டையில் போக்சோவில் கைதாகி சிறையிலுள்ளவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

திருச்சுழி அருகே சாமிநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதுரை வீரன் (56). இவா் கடந்த இருவாரங்களுக்கு முன்னா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோவில் கைது செய்தனா். இதையடுத்து கைதாகி சிறையிலுள்ள மதுரைவீரன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால், மாவட்ட எஸ்பியின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி மதுரை வீரன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் மதுரை வீரனை மதுரை மத்தியசிறையில் அடைத்து காவல்துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.