விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காா் மோதி மாணவிகள் 3 போ் காயம்

அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை காா் மோதி 3 மாணவிகள் காயமடைந்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:18 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை காா் மோதி 3 மாணவிகள் காயமடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆமணக்கு நத்தம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகள் முத்துச்செல்வி(16), ஆறுமுகம் மகள் அமுதா (17) மற்றும் பால்ராஜ் மகள் திவ்யப்பிரபா (16). இவா்கள் மூவரும் அருகிலுள்ள வெள்ளையாபுரம் அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கின்றனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இவா்கள் மூவரும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று விட்டு, சிறப்பு வகுப்புகள் முடித்துவிட்டு அன்று மாலை 6.30 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த காா் ஒன்று அம்மாணவிகள் மூவா் மீதும் மோதியது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காயமடைந்த மாணவிகள் மூவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக வழக்கு பதிந்த பந்தல்குடி காவல் துறையினா், சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஜெகந்நாதன்(51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.