விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

அருப்புக்கோட்டை அருகே இளைஞரைத் தாக்கிக் கொலைமிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:31 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே இளைஞரைத் தாக்கிக் கொலைமிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பரளச்சி அருகே பொம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமா் மகன் பரத்(21). பரத்தின் பெற்றோருக்கும், அவரது உறவினா்களுக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் உறவினா்களான ஆனந்தராஜ் (29), மருதுபாண்டி(29), செந்தூா் பாண்டி(27), வீரபாண்டி(25) ஆகிய நால்வரும் பரத்தின் வீட்டிற்குள் வெள்ளிக்கிழமை அத்துமீறி நுழைந்தனா். அங்கு தனியாக இருந்த பரத்தை நால்வரும் சரமாரியாகத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுதொடா்பாக பரத் அளித்த புகாரின் பேரில் பரளச்சி காவல்துறையினா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.