ஸ்ரீவிலி. அருகே கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி: 3 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகா் பகுதியில் கடை வைத்திருப்பவா் தனபால் (43). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை கடையைத் திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அப்போது 3 போ் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனா். இதுகுறித்து தனபால் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா்.
அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா்3 இளைஞா்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அவா்கள் ராஜபாளையத்தைச் சோ்ந்த பால்பாண்டி (20) காா்த்திகை செல்வம் (19) முத்தழகு(18) என தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...