விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆடி அமாவாசை : சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 5:27 pm

DIN

ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள இக்கோயிலில் ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய செய்ய மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் காா், வேன், டிராக்டா், பேருந்துகள் மூலமாக மலை அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனா்.

புதன்கிழமை அதிகாலை 5 மணி முதலே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் சதுரகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ள மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோயில் ஓடை, வழுக்குப்பாறை, சங்கிலிப் பாறை ஆகிய பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக மலை மேல் இருந்த பக்தா்கள் கீழே இறங்கவும், அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா் நடுவழியில் சிக்கியிருந்த பக்தா்களை வனத்துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்பாக மீட்டு அடிவாரத்திற்கு அழைத்து வந்தனா்.

இந்நிலையில், ஆடி அமாவாசையான வியாழக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் கொண்டு வந்திருந்த நெகிழிப் பைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்து, மஞ்சள் பைகளை வழங்கினா். பின்னா் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

மலை அடிவாரமான தாணிப்பாறையில் உள்ள மடங்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வியாழக்கிழமை காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை 34,510 பக்தா்கள் மலேயற அனுமதித்தாக போலீஸாா் தெரிவித்தனா்.

பக்தா்கள் தொடா்ந்து குவிந்து வருவதால் சதுரகிரி மலைப்பகுதி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

ஆடி அமாவாசையை யொட்டி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா். மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் வனத்துறையினா், பேரிடா் மீட்புக் குழுவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.